271 தீர்ப்புகளில் கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சினைகள்
2023 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு குடியேற்ற மற்றும் புகலிடத் தீர்ப்பாயத்தின் 271 தீர்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. முதல் நிலைத் தீர்ப்பாயத்தின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரிக்கிறது.
சில வழக்குகளில் குடும்ப உறவுகள் குறித்து ஐரோப்பாவை மையமாகக் கொண்ட குறுகிய எதிர்பார்ப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் கணவர் இறந்த பின்னர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலை நிரூபிக்க தொலைபேசி மற்றும் உரையாடல் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட வழக்கும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் அடையாளத்தை உடல் மொழி, பாலியல் செயல்பாடு அல்லது ஒரே பாலின உறவு இருந்ததா என்பதன் அடிப்படையில் மதிப்பிடுவது தவறு என்றும் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவரின் பாலியல் அடையாளத்தை காலப்போக்கில் தெளிவாக வெளிப்படுத்துவது, பொய்யின் அறிகுறி அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
மனஅழுத்தம் மற்றும் பாதிப்பு அனுபவங்களை அனைவரும் ஒரே மாதிரியாகவும் நேர்முறையாகவும் விவரிப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. சிகிச்சை கிடைப்பது மட்டுமல்லாமல், அதை நடைமுறையில் அணுகவும் பயன்படுத்தவும் முடியுமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். UK asylum tribunal report, மொழிபெயர்ப்பாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் சட்டப் பிரதிநிதிகளுக்கான கலாசார உணர்வுப் பயிற்சியை மேம்படுத்த பரிந்துரைக்கிறது.































