Qiwa விதிகளின்படி Work Permit-களை 3, 6, 9 அல்லது 12 மாதங்களுக்கு வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். சில தொழில்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புகள் மட்டுமே அனுமதிக்கப்படலாம்.
Work Permit கட்டணம் எவ்வளவு?
முதல் 90 நாட்களுக்கு Work Permit கட்டணம் விதிக்கப்படாது. அதன் பின்னர் அடிப்படை கட்டணம் மற்றும் மாதாந்திர வெளிநாட்டு தொழிலாளர் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். சவுதி ஊழியர்களின் எண்ணிக்கையை மீறாத வெளிநாட்டு ஊழியர்கள் SAR 8500 வரை செலுத்த நேரிடும்.
| காலம் | மொத்த கட்டணம் |
|---|---|
| 3 மாதங்கள் | SAR 2,125 |
| 6 மாதங்கள் | SAR 4,250 |
| 9 மாதங்கள் | SAR 6,375 |
| 12 மாதங்கள் | SAR 8,500 |
சவுதி ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக வெளிநாட்டு ஊழியர்கள் இருப்பார்களாயின் SAR 9700 வரை செலுத்த நேரிடும்.
| காலம் | மொத்த கட்டணம் |
|---|---|
| 3 மாதங்கள் | SAR 2,425 |
| 6 மாதங்கள் | SAR 4,850 |
| 9 மாதங்கள் | SAR 7,275 |
| 12 மாதங்கள் | SAR 9,700 |
இந்த கட்டணங்களில் வருடாந்திர Work Permit கட்டணமும் மாதாந்திர வெளிநாட்டு தொழிலாளர் கட்டணமும் அடங்கும்.
Work Permit புதுப்பிப்பது எப்படி?
Qiwa Business தளத்தின் மூலம் Work Permit-ஐ புதுப்பித்துக்கொள்ளலாம். முதலில் நிறுவனத்தின் Qiwa Business கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர் Services பகுதிக்குச் சென்று Work Permits என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் Issue or Renew Work Permits என்ற விருப்பத்தை கிளிக் செய்து புதுப்பிக்க வேண்டிய பணியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து 3, 6, 9 அல்லது 12 மாதங்களில் தேவையான Work Permit காலத்தைத் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதும் விண்ணப்பம் நிறைவு செய்யப்பட்டு Work Permit புதுப்பிப்பு செயல்முறை முடிவடையும்.
Work Permit புதுப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?
Qiwa விதிகளின்படி ஒரு வெளிநாட்டு பணியாளரின் Work Permit காலாவதியான பின்னரும் அதை புதுப்பிக்காமல் விட்டால் அந்த நிறுவனத்திற்கு பல்வேறு நிர்வாக மற்றும் தொழிலாளர் சேவைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். குறிப்பாக புதிய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலை விசா (Work Visa) பெறுதல் பணியாளர்களை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்குப் மாற்றம் (Transfer) செய்தல் போன்ற முக்கிய சேவைகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேலும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளை மீறியதாகக் கருதப்பட்டு நிறுவனத்திற்கு அபராதங்கள் விதிக்கப்படலாம். இதனால் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட பணியாளர்களின் Iqama மற்றும் வேலை நிலையும் சிக்கலுக்குள்ளாகலாம். எனவே Work Permit காலாவதியாகும் முன்பே அதை புதுப்பிப்பது நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் மிகவும் அவசியமானதாகும்.
































