சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு இலங்கையரும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய நடைமுறைகளில் ஒன்று Sri Lanka Bureau of Foreign Employment பதிவு ஆகும். வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான காப்புறுதி, இழப்பீடு, நலத்திட்டங்கள், புலமைப்பரிசில், சுயதொழில் உதவி, சில கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியாக இந்த பதிவு கருதப்படுகிறது.

SLBFE பதிவு இல்லாதவர்களுக்கு பல நலத்திட்டங்களைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படக்கூடும். எனவே வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன்பே இந்தப் பதிவை சரியான முறையில் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

SLBFE பதிவு என்பது ஒரு சாதாரண பதிவு மட்டுமல்ல. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் பதிவு செய்து அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நலன்களை வழங்கும் அமைப்பாகும்.

பின்வரும் பல திட்டங்களுக்கு செல்லுபடியாகும் SLBFE பதிவு கட்டாயமாகும்.

  • வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான காப்புறுதி பாதுகாப்பு
  • மரணம் அல்லது நிரந்தர ஊனமுற்ற நிலைக்கான இழப்பீடு
  • பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்
  • சுயதொழில் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்கள்
  • சில விசேட கடன் வசதிகள்
  • வெளிநாட்டு தொழிலாளர் நல உதவிகள்
யார் எந்த சந்தர்ப்பங்களில் SLBFE-யில் பதிவு செய்ய வேண்டும்?

Sri Lanka Bureau of Foreign Employment Act No. 21 of 1985-ன் கீழ், இலங்கையிலிருந்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு இலங்கையரும் SLBFE யில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  • முதல் முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் போது.
  • வேலை வழங்குநரை Employer மாற்றும் போது.
  • Re-entry Visa பெற்று மீண்டும் அதே அல்லது புதிய வேலைக்குச் செல்லும் போது.
  • Tourist Visa மூலம் வெளிநாடு சென்று பின்னர் Work Visa பெற்று சட்டபூர்வமாக வேலை செய்யத் தொடங்கும் போது.
எங்கு பதிவு செய்யலாம்?
1. SLBFE தலைமை அலுவலகம்

234, Denzil Kobbekaduwa Mawatha,
Koswatta,
Battaramulla,
Sri Lanka.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

2. SLBFE மாவட்ட அல்லது மாகாண கிளை அலுவலகங்கள்

உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள SLBFE மாவட்ட அல்லது மாகாண கிளை அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.

3. ஆன்லைன் பதிவு

SLBFE அதிகாரப்பூர்வ ஆன்லைன் பதிவு வசதியையும் வழங்குகிறது.

ஆன்லைனில் பதிவு செய்யும்போது

  • தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் அனைத்து அசல் ஆவணங்களுடனும் SLBFE தலைமை அலுவலகம் அல்லது அருகிலுள்ள கிளை அலுவலகத்திற்கு சென்று சரிபார்ப்பு நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
புதிய பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

SLBFE அதிகாரப்பூர்வ பட்டியலின்படி பின்வரும் ஆவணங்கள் அவசியம்.

1. கடவுச்சீட்டு (Passport)

குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாக இருக்க வேண்டும்.

2. செல்லுபடியாகும் Visa அல்லது Entry Permit

வேலைக்கான செல்லுபடியாகும் விசா அல்லது அனுமதி ஆவணம்.

3. வேலை ஒப்பந்தம்

Service Agreement அல்லது Employment Contract.

4. அனுபவம் அல்லது பயிற்சி சான்றிதழ்

  • வெளிநாட்டு வேலை அனுபவம்
  • உள்ளூர் வேலை அனுபவம்
  • SLBFE Training சான்றிதழ்
  • தொழில்பயிற்சி சான்றிதழ்
  • Professional Qualification

5. Family Background Report

45 வயதிற்குக் குறைவான பெண் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இது கட்டாய ஆவணமாகும்.

6. Jordan செல்லும் சில தொழிலாளர்கள்

Jordan Insurance Company வழங்கிய Insurance Certificate சமர்ப்பிக்க வேண்டும்.

Family Background Report எங்கு பெறலாம்?

45 வயதிற்குக் குறைவான பெண் தொழிலாளர்கள், தங்களது மாவட்ட செயலகத்தில் (District Secretariat / கச்சேரி) பணிபுரியும் Development Officer மூலமாக Children’s Care Plan அல்லது Family Background Report பெற வேண்டும். இந்த ஆவணம் SLBFE பதிவிற்கான கட்டாய நிபந்தனையாகும்.

பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள்

SLBFE அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல படிவங்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. தேவைக்கேற்ப இவை நிரப்பப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பதிவு கட்டணம்
முதல் பதிவு

Rs. 22,027

பதிவு புதுப்பித்தல் – Renewal

Rs. 4,599

கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகைகளாகும். எதிர்காலத்தில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதால் விண்ணப்பிக்கும் முன் உறுதிப்படுத்துவது நல்லது. பொதுவாக பதிவு வேலை ஒப்பந்தத்தின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு செல்லுபடியாகும்.

அதே வேலை வழங்குநரிடம் தொடர்ந்து பணிபுரிந்தாலும் பதிவு காலாவதியானதும் Renewal செய்ய வேண்டும். வேலை வழங்குநரை மாற்றினால் புதிய பதிவு நடைமுறைகள் பொருந்தலாம்.

ஆவணங்களை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

பதிவிற்கான அனைத்து ஆவணங்களும் பின்வரும் இடங்களில் சமர்ப்பிக்கப்படலாம்.

  • SLBFE தலைமை அலுவலகம்
  • SLBFE மாவட்ட அல்லது மாகாண கிளை அலுவலகம்
  • சில Renewal நடைமுறைகளில் சம்பந்தப்பட்ட இலங்கை தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயம் (அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக)

SLBFE Hotline – 1989

தொலைபேசி – +94 11 288 0500

வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கான உதவி – +94 71 980 2822

மின்னஞ்சல் – info_center@slbfe.lk

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்