தகவல்களின்படி குறைந்த அளவிலான புகலிட அங்கீகார விகிதம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சிலர் விரைவுபடுத்தப்பட்ட எல்லை நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு அவர்களை மீண்டும் தாய்நாடு அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கு அனுப்பும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ஐரோப்பிய ஒன்றிய புகலிட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடர்பாக கனாரி தீவுகளின் பிராந்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது. தீவுகளில் ஏற்கனவே அதிகளவிலான குடியேற்ற அழுத்தம் நிலவுவதால் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேவையான வசதிகள் மனிதவளங்கள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் போதுமானதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் இந்த நடைமுறைகள் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர். குறிப்பாக விரைவான பரிசீலனை மற்றும் திருப்பி அனுப்பும் செயல்முறையில் நியாயமான சட்ட உதவி மற்றும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் வெளிப்புற எல்லைகளில் புகலிட விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து பாதுகாப்பு பெறும் வாய்ப்பு குறைவான நாடுகளைச் சேர்ந்தவர்களின் வழக்குகளை வேகமாக முடித்து திருப்பி அனுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதன் முதல் பெரியளவிலான நடைமுறை அமலாக்கம் தற்போது ஸ்பெயினின் கனாரி தீவுகளில் சோதனையை எதிர்கொண்டு வருகிறது.






























