இந்திய கடற்படையின் அழைப்பின்பேரில் அவர் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். பயணத்தின்போது இந்தியாவின் மூத்த பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு
இந்த உயர்மட்ட சந்திப்புகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் இருதரப்பும் கவனம் செலுத்தின.
இந்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின.
































