Sri Lanka Rupee Exchange Rate Today, டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒப்பிடுகையில் இன்று (27.07.2026) இலங்கை ரூபாய் சற்று சரிவு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 331.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூ. 340.83 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ஸ்டெர்லிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 441.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூ. 456.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 376.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூ. 390.17 ஆகவும் உள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 234.30 மற்றும் விற்பனைப் பெறுமதி ரூ. 243.21 ஆகவும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 229.78 மற்றும் விற்பனைப் பெறுமதி ரூ. 240.85 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 255.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூ. 266.02 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. உலக நாணய சந்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப தினசரி நாணய மாற்று விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.













Leave a Reply