சுற்றுலா சட்டம் இலக்கம் 38 of 2005-ன் கீழ், பதிவு மற்றும் செல்லுபடியாகும் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் அல்லது உரிமம் காலாவதியான நிலையில் சுற்றுலா தொழிலை நடத்துவது சட்டவிரோதமானது என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே, சுற்றுலா சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் பதிவு மற்றும் உரிம நிலையை சரிபார்த்து, தேவையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Sri Lanka tourism licence தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற 1912 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். உரிமம் மற்றும் பதிவு தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது சட்டப்பூர்வமான சுற்றுலா சேவைகளை உறுதிப்படுத்தும் என SLTDA தெரிவித்துள்ளது.





























