ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் அதிக தேவை காணப்பட்டாலும் தற்போது சந்தை இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாகன இறக்குமதி தொடர்பான தற்போதைய தரவுகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்றும் 2019 ஆம் ஆண்டின் தரவுகளே சரியான ஒப்பீட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுங்கத் திணைக்களத்தின் தகவலின்படி முன்பு நாளொன்றுக்கு 800 முதல் 850 வரை இருந்த சுங்க அறிவிப்புகள் தற்போது 300 முதல் 350 வரை குறைந்துள்ளன. மேலும் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1,070 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களால் வாகன இறக்குமதிச் செலவு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






























