பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் வழக்குகள் நெருங்கும் போது சிலர் கலக்கமடைந்து பாராளுமன்றத்தில் அரசியல் நாடகம் ஆடுவதாகவும் ஆனால் தாங்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
சிறந்த சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்று வழக்குகளை எதிர்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தற்போதைய அரசாங்கம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாகவும் நீதித்துறையில் அரசியல் தலையீடு அல்லது அழுத்தம் செலுத்தும் தேவையோ நோக்கமோ தமக்கில்லை என்றும் சுனில் ஹந்துனெத்தி வலியுறுத்தினார்.
































