Tag: வெளிநாட்டு செய்திகள்
UK விசா அல்லது Electronic Travel Authorisation விண்ணப்பிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் புகைப்படம் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை UK Visas and Immigration மீண்டும் நினைவூட்டியுள்ளது. தவறான அல்லது தரமற்ற புகைப்படங்கள் காரணமாக விண்ணப்பங்கள் தாமதமடையவோ புதிய புகைப்படம் சமர்ப்பிக்குமாறு கோரப்படவோ சில சந்தர்ப்பங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்படவோ முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. UKVI வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி புகைப்படம் தெளிவாகவும் நிறப்புகைப்படமாகவும் நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். புகைப்படத்தில் விண்ணப்பதாரர் […]
குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டங்களின் கீழ் பாதசாரிகள் சாலை கடக்கும் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறிப்பிட்ட நடைபாதை (Pedestrian Crossing) பகுதிகளை பயன்படுத்தாமல் சாலையை கடக்கும் நபர்களுக்கு 20 தொடக்கம் 75 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. குவைத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டங்களின் மூலம் வாகன ஓட்டிகளுடன் பாதசாரிகளும் போக்குவரத்து ஒழுங்குகளை கட்டாயமாக பின்பற்ற […]
சுவிட்சர்லாந் – விதியை மீறினால் அதிகபட்சமாக 2,000 சுவிஸ் ஃப்ராங்க் வரை அபராதம். சுவிட்சர்லாந்தின் பிரபலமான A1 நெடுஞ்சாலையில் உள்ள Würenlos சேவை நிலையத்தில் (rest area) தவறான முறையில் வாகனங்களை நிறுத்துவோருக்கு இனிமேல் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களை கார்கள் மற்றும் லாரிகள் அடிக்கடி ஆக்கிரமிப்பதால் இந்த புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந் Baden மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, இனிமேல் அந்த பகுதிகளில் […]
குவைத் பாதுகாப்பு தொடர்பாக எந்த அச்சுறுத்தலும் இல்லை. குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் பதிவாகவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிராந்திய பதற்றங்கள் நிலவிவரும் சூழலில் பாதுகாப்பு மற்றும் இராணுவப்படைகள் முழுமையான தயார்நிலையிலும் உயர்ந்த எச்சரிக்கையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு தலையீடுகளின் போது விழுந்த சிதறல் பொருட்கள் தொடர்பாக பல புகார்கள் கிடைத்துள்ளன அவற்றை வெடிகுண்டு நீக்கம் அணிகள் திறம்பட கையாளுகின்றன. அதிகாரிகள் […]
சுவிட்சர்லாந்தின் பிரபல ஸ்கீ சுற்றுலா நகரமான கிரான்ஸ்-மோண்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உள்ளூர் பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கடுமையாக காயமடைந்தவர்களுக்கும் சுவிஸ் அரசு தலா 50,000 சுவிஸ் பிராங்க் (சுமார் 56,000 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உதவி தொகை உடனடி நிதி உதவியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் […]