UKVI வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி புகைப்படம் தெளிவாகவும் நிறப்புகைப்படமாகவும் நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். புகைப்படத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே இருக்க வேண்டும். பின்னணி வெள்ளை அல்லது வெளிர் நிறமாக இருக்க வேண்டும். முகம் முழுமையாக தெளிவாகத் தெரியும் வகையில் தலை நேராகவும் கண்கள் திறந்தும் இருக்க வேண்டும்.
மேலும் புகைப்படத்தில் எந்தவிதமான Filter Editing அல்லது Computer Software மூலம் மாற்றம் செய்யப்பட்டிருக்கக் கூடாது. பாஸ்போர்ட்டில் உள்ள பழைய புகைப்படத்தை மீண்டும் பயன்படுத்தவோ அல்லது மற்றொரு புகைப்படத்தின் நகலைப் பதிவேற்றவோ கூடாது என்றும் UKVI தெரிவித்துள்ளது.
முகத்தில் நிழல் இருக்கக் கூடாது. மத அல்லது மருத்துவ காரணங்களைத் தவிர தலைக்கவசம் அணியக் கூடாது. கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருந்தால் கண்கள் தெளிவாகத் தெரிய வேண்டும் பிரதிபலிப்பு அல்லது கண்ணாடி சட்டம் கண்களை மறைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தாமாக Selfie எடுப்பதை விட மற்றொருவரின் உதவியுடன் புகைப்படம் எடுப்பது நிராகரிப்பு அபாயத்தை குறைக்கும் என்றும் UKVI பரிந்துரைத்துள்ளது. எனவே UK விசா அல்லது ETA விண்ணப்பிக்க உள்ளவர்கள் புகைப்படத்தை பதிவேற்றும் முன் அனைத்து விதிகளையும் கவனமாக சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.





























