Tag: Breaking News
இலங்கையின் ரயில்வே வரலாற்றில் அரிய நிகழ்வாக பல தசாப்தங்கள் பழமையான வரலாற்றுச் ரயில் என்ஜின் ஒன்று கண்டி மற்றும் பேராதனை இடையே ரயில் பாதையைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ நடவடிக்கை ரயில் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.பொதுவாக ரயில் என்ஜின்கள் தண்டவாளங்களிலேயே நகர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை சிறப்பு கனரக போக்குவரத்து வாகனத்தின் உதவியுடன் சாலை வழியாக என்ஜின் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் போக்குவரத்து […]
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp)பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் புதிய பயனர் பெயர் (Username) அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய வசதி அறிமுகமானால் இனி புதிய நபர்களுடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி எண்ணை பகிர வேண்டிய அவசியம் இல்லாமல் பயனர் பெயர் மூலமாகவே உரையாடலை தொடங்க முடியும். தற்போது வாட்ஸ்அப்பில்(WhatsApp) ஒருவருடன் உரையாட அவர்களின் மொபைல் எண் அவசியமாக உள்ளது. ஆனால் புதிய மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு பயனரும் தங்களுக்கென […]
குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றும் அனைத்து விசாரணைகளும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக சுயாதீனமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். விசாரணைகளின் உள்தகவல்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாவிட்டாலும் […]
வவுனியா மாநகர சபையின் செங்கோல் முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர்கள் பிரேமதாஸ் மற்றும் சி. கிரிதரன் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள் ஆளுநரின் உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட பொருட்களுடன் மாநகர சபைக்குச் சொந்தமான செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கத்தையும் […]
வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் அமைந்துள்ள மங்களாபுர வில்லுவில் தோனி ஒன்று கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் பூப்பறிப்பதற்காக தோனியில் சென்ற ஐந்து மாணவர்களில் எதிர்பாராத விதமாக தோனி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அனைவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததன் மூலம் உயிர் தப்பியுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து பொலிஸாரும் பிரதேச […]
வடக்கு ஜெர்மனியின் ஸ்டாடே (Stade) நகரில் இடம்பெற்ற அதிர்ச்சி தரும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.போலீசார் வெளியிட்ட தகவலின்படி சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற உடனேயே ஏராளமான போலீசார் மற்றும் அவசர மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். […]
சமீப மாதங்களில் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிய தங்கம் விலை தற்போது கணிசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 கிராம் தங்கம் இந்திய மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில் (MCX) சுமார் ரூ.1,92,991 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது அது ரூ.1,43,610 அளவிற்கு குறைந்துள்ளது. இதன் மூலம் உச்ச நிலையிலிருந்து சுமார் ரூ.50,000 வரை மதிப்பு குறைந்துள்ளது.இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களையும், நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களையும் ஒரே கேள்வியில் நிறுத்தியுள்ளது ஆண்டின் தொடக்கத்தில் […]
முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 26ஆம் திகதி அநுராதபுர நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பவம் தொடர்பான முதலாவது மரபணு (DNA) பரிசோதனை அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம். அநுர குணவர்தன நீதிமன்றத்தில் அறிவித்தார். […]
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV அவர்கள் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகத்தை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளதாக வத்திக்கான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதேவேளை இதுவரை யாழ்ப்பாண ஆயராகப் பணியாற்றிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின் பதவி விலகலையும் போப் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனம் வட இலங்கையின் கத்தோலிக்க மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆயராக பொறுப்பேற்கும் அன்டன் ரஞ்சித் ஆண்டகை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளை புதிய […]
நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு இதுவரை 18,412 பொசன் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் தேதி செயல்படவுள்ள தான்சல்கள் அனைத்தும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறினார். மேலும் பொசன் விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். உணவு மற்றும் பானங்களை வழங்கும் […]