ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி ஒரு மாணவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்ததன் மூலம் உயிர் தப்பியுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல் போயிருந்தனர். இதையடுத்து பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் காணாமல் போன நான்கு மாணவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களாபுர பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



























