காலி மாவட்டத்தின் கொக்கல ஆற்றுப் பகுதியில் இன்று (21) காலை குளிக்கச் சென்ற இரண்டு நபர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஆற்றில் இறங்கி நீந்த முற்பட்ட வேளையில் எதிர்பாராத விதமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய இருவரில் ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மற்றைய நபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Leave a Reply