Tag: Governance
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினன தகுண அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) அண்மையில் நடத்திய சமூகக் குறிகாட்டி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 64.1 சதவீதமானோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகப் பரவலாக்கத்தின் முக்கிய அம்சம் என 67 சதவீதமானோர் கருதுவதாகவும் […]
எதேச்சாதிகார, சர்வாதிகார மற்றும் தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டை உருவாக்க அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். “இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளின் விசேட ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் சீர்குலைக்கப்படும் சூழலில் சிவில் சமூக அமைப்புகளும் சுதந்திர ஊடகங்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் […]
சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT) பாராட்டியுள்ளதாக வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் […]
வவுனியா மாநகர சபையின் செங்கோல் முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாநகர சபை செயலாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர்கள் பிரேமதாஸ் மற்றும் சி. கிரிதரன் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள் ஆளுநரின் உத்தரவின் பேரில் முன்னாள் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட பொருட்களுடன் மாநகர சபைக்குச் சொந்தமான செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கத்தையும் […]
இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆசியா-பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA கடும் கவலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக […]
ஜோர்ஜியா நாட்டில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை மன்றம் 2026 (UN Public Service Forum 2026) நிகழ்வில் இலங்கை பங்கேற்று அரசுப் பொதுச்சேவைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும் அனுபவங்களையும் உலக நாடுகளுடன் பகிர்ந்துள்ளது.இந்த உயர்மட்ட சர்வதேச மன்றத்தில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுச்சேவைகளை மேலும் திறமையானதாகவும் மக்கள்மையமாகவும் மாற்றுவது குறித்து கலந்துரையாடினர்.இலங்கை பிரதிநிதிகள், டிஜிட்டல் மாற்றம், அரச சேவைகளின் நவீனமயமாக்கல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை […]
இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மாகாண சபை முறைமை முடக்கப்பட்டிருப்பதால் மக்களின் அரசியல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]