LAWASIA வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாற்றமும் பரந்த அளவிலான ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இலங்கை வழக்கறிஞர் சங்கம் (BASL) இதே விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது LAWASIAவும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது இந்த விவகாரத்திற்கு சர்வதேச முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.




























