Tag: petrol price
சுவிட்சர்லாந்து பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அண்மைய மாதங்களில் பதிவான உச்ச விலையை விட தற்போதைய விலைகள் இன்னும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Touring Club Switzerland (TCS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 95 Octane பெட்ரோலின் சராசரி விலை ஒரு லிட்டருக்கு CHF 1.84 ஆகவும், 98 Octane பெட்ரோலின் விலை CHF 1.95 ஆகவும் உள்ளது. டீசல் ஒரு லிட்டர் CHF 2.00 […]
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய […]
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த யுத்தம் முடிவடைந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருட்களின் விலையை குறைத்து அதன் நன்மையை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானபோது உலக சந்தை நிலவரத்தை காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் […]
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அபாயம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் காரணமாக இந்த எண்ணெய் விலை உயர்வு அபாயம் மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபிடன் எனர்ஜி நிறுவனத் தலைவர் பாப் மெக்நாலி கூறுகையில் உலக எண்ணெய் சந்தையில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் விலை அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதால் இலங்கையில் அடுத்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முன்பிருந்த அளவிற்கு உலக சந்தை விலைகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார். இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உலக சந்தை நிலவரம் மற்றும் […]
பிரான்ஸ் எரிபொருள் இல்லாத நிலையங்களை எப்படி கண்டறிவது ? பிரான்சில் எரிபொருள் (பெட்ரோல், டீசல் போன்றவை) கிடைக்கிறதா அல்லது சில நிலையங்களில் ஸ்டாக் முடிந்துவிட்டதா என்பதை அறிய அரசு ஒரு அதிகாரப்பூர்வ இணையதள சேவையை வழங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களின் தற்போதைய விலை மற்றும் கிடைக்கும் நிலை (availability) பற்றிய தகவலை நேரடியாக (real-time) பார்க்க முடியும். குறிப்பாக எந்த நிலையத்தில் எந்த வகை எரிபொருள் இல்லாமல் போயுள்ளது […]
எரிபொருள் விலை உயர்வு – பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பு. பிரான்சில் எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக 2026 மார்ச் மாதத்தில் அரசுக்கு சுமார் 270 மில்லியன் யூரோ அளவிற்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அரசின் பொது கணக்குகள் மற்றும் நடவடிக்கை அமைச்சராக உள்ள டேவிட் அமியல் வெளியிட்டார். இந்த எரிபொருள் விலை உயர்வு வருவாயில் சுமார் 120 மில்லியன் யூரோ மதிப்பு எரிபொருளுக்கு விதிக்கப்படும் VAT (மதிப்புக்கூட்டல் வரி) மூலம் […]