சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அபாயம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் காரணமாக இந்த எண்ணெய் விலை உயர்வு அபாயம் மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபிடன் எனர்ஜி நிறுவனத் தலைவர் பாப் மெக்நாலி கூறுகையில் உலக எண்ணெய் சந்தையில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இதனால் விலை அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவது சந்தை நிலைத்தன்மையை மேலும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) தரவுகளின்படி மே 29 முதல் ஜூன் 5 வரை மட்டும் 7.9 மில்லியன் பீப்பாய்கள் கையிருப்பில் இருந்து குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் தொடர்பான போர் சூழ்நிலை மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளன. ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விநியோகம் சீராகும் வாய்ப்பு இருப்பதாகவும் இல்லையெனில் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சில கணிப்புகளின்படி உலக எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை கடந்தும் செல்லக்கூடும் எனவும் அமெரிக்காவில் பெட்ரோல் விலை கெல்லனுக்கு 5 டாலர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் சுமார் 82 டாலராகவும் அமெரிக்க கச்சா எண்ணெய் 84 டாலராகவும் நிலவுகிறது.

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது உலக எண்ணெய் விநியோகத்தை சீராக்க முக்கிய காரணியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்