September 10, 2026
Breaking News
பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

Tag: police investigation

நவகமுவ துப்பாக்கிச் சூடு 26 வயது இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கடுவெல பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் முதலில் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையிலான தகராறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் […]

கடுவெலையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு மாவட்டத்தின் கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசாரணைப் பிரிவினர் ஆதாரங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஹோமாகம கால்வாயில் சடலம் கொலையா? தீவிர விசாரணை

Sri Lanka News, ஹோமாகம பிடிப்பன பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (16) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு ஜோடி காலணியும் 20 ரூபாய் நாணயத்தாளும் மீட்கப்பட்டுள்ளன. அந்த இடத்திலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் […]

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து தவறுதலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நகைக் கடையொன்றுக்குச் சென்றிருந்த அவர் தாகம் காரணமாக குடிநீர் கேட்டதையடுத்து கடை ஊழியர் அருகிலுள்ள கடையிலிருந்து வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாக கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போத்தலில் […]

இளம்பெண் கொலை விசாரணையில் அதிர்ச்சி

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாடகை வீட்டொன்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட 27 வயதுடைய நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம்பெண்ணின் கொலை தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்த 27 வயது ஆணுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தனது தாய் […]

தங்காலை கடலில் மாயமான இளைஞரின் உடல் மீட்பு

Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஐக்கிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி எவ்வாறு அவரது வசம் வந்தது அது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா மேலும் ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

ஜெர்மனியை உலுக்கிய மருத்துவரின் கொடூரம்

Europe News,ஜெர்மனியின் பெர்லின் நகரில் பணியாற்றிய 41 வயதுடைய நிவாரண சிகிச்சை மருத்துவருக்கு தனது 15 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் தனியுரிமை சட்டங்களின்படி யோஹன்னஸ்.எம் என மட்டும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ள அவர் 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை கொலை செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தபோது நோயாளிகளின் அனுமதியின்றி உயிரிழப்பை ஏற்படுத்தும் மருந்துக் கலவையை […]

வாடகை வீட்டில் சடலமாக மாணவி மீட்பு

பாணந்துறை வடக்கு கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீட்டொன்றில் இருந்து 26 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் படிப்பு பயின்று வந்த மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து தனது கல்வியைத் தொடர்ந்து வந்ததுடன் சட்டத்தரணி ஒருவரின் அலுவலகத்தில் சட்டப் பணிகளுக்கும் உதவி செய்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் […]

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய கால்பந்து நட்சத்திரம்

Africa News,ஜிம்பாப்வே தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரர் டிவைன் லுங்கா தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப தகவல்களின் படி அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க காவல்துறை தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை […]