Tag: SriLankan Airlines
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான விசாரணை 76 நாட்கள் கடந்தும் முக்கிய முன்னேற்றமின்றி இருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசியின் பாதுகாப்பு பூட்டை (Lock) இன்னும் திறக்க முடியாததால் தடயவியல் பரிசோதனைக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய விமான சேவையின் தற்போதைய நிலையை விரிவாக ஆய்வு செய்து அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் போட்டித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபகரமான மற்றும் நிலையான நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதே இந்தக் குழுவின் பிரதான பொறுப்பாகும். […]
SriLankan Airlines நிறுவனம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலை மற்றும் வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த தனது சர்வதேச சேவைகளில் சிலவற்றை படிப்படியாக மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று Bandaranaike International Airport இலிருந்து Dubai International Airport நோக்கி இயக்கப்படும் UL231 விமானம் பிற்பகல் 2.50 மணிக்கு திட்டமிட்டபடி புறப்பட உள்ளது, அதற்கான திரும்பும் சேவையான UL232 டுபாயிலிருந்து மாலை 7.10 மணிக்கு புறப்படவுள்ளதாகவும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், […]