தமிழ் காலண்டர் 2026-ல் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, சந்திராஷ்டமம், சித்த யோகம், திதி மற்றும் தினசரி நட்சத்திர நேரங்கள் போன்ற பஞ்சாங்க விவரங்களும் இடம்பெறுகின்றன. திருமணம், வீடு புகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான முகூர்த்த நாட்களைத் தேர்வு செய்யவும் இத்தகவல்கள் உதவுகின்றன.
2026ஆம் ஆண்டின் முக்கிய தினங்கள்
ஜனவரி 1 புத்தாண்டு தினமாகவும், ஜனவரி 16 திருவள்ளுவர் தினமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 19 தெலுங்கு புத்தாண்டு தினம். மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 வணிக வங்கிகளின் வருடாந்திர கணக்கு முடிவு நாளாகும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளாகக் குறிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி தினமாக இடம்பெற்றுள்ளது. இதனுடன் பல்வேறு கோயில்களின் தேர்த்திருவிழாக்கள், தெப்பத் திருவிழாக்கள், நவராத்திரி கொலு, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நேரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
Tamil Calendar 2026 மூலம் சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் மாதங்களின் சிறப்புகள், பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகளின் பண்பாட்டு முக்கியத்துவம், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களின் வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ளலாம்.































