அம்பாலாவை சென்றடைந்த விசாரணை
தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவை விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
தேனி மாவட்டம் கண்டமனூர், தென்கரை பகுதிகளில் ஜூலை மாதம் கைப்பற்றப்பட்ட வெளிமாநிலப் பார்சல்களில் போதை மாத்திரைகள் இருந்தன. போலிப் பெயர் மற்றும் முகவரிகளில் அனுப்பப்பட்ட பார்சல்களின் பின்னணியைத் தொடர்ந்து ஆய்வு செய்த போலீஸார், அவை ஹரியானா மாநிலம் அம்பாலாவிலிருந்து அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 588 சந்தேகத்துக்குரிய பார்சல்கள் பதிவுசெய்து அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் 11 பார்சல்கள் தமிழ்நாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Tamil Nadu drug tablet network-ன் மூளையாக மகேந்திர சிங் வஹ்ட் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உதவியதாகக் கூறப்படும் சுனில் குமாரும் நவம்பர் 2-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பணப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் பிற மாநிலத் தொடர்புகள் குறித்த விசாரணை தொடர்கிறது.

































