போர்டலை குறிவைத்து நடந்ததாக சந்தேகம்
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நல மையக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான பணப் பரிவர்த்தனைகள், ஊரக வளர்ச்சித் துறையின் மாநில அளவிலான ஒற்றை மையக் கணக்கு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் இணைந்து உருவாக்கிய பரிவர்த்தனை போர்டல் மூலம் மோசடி நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகளுக்கான உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி, மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட இணைப்புகள் மூலம் போர்டலுக்குள் நுழைந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பணம் சென்ற கணக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. IP முகவரிகள் ஆய்வில் அமெரிக்கா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். Tamil Nadu rural development cyber fraud தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






























