சமயபுரம் போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்டம் புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த சேவியர் லாரன்ஸின் மகன் கிறிஸ்டோபர். சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய அவர், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். புறத்தாக்குடி நடுத்தெருவில் நண்பர்கள் ரஞ்சித், லெனின் ஆகியோருடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மேலத்தெருவைச் சேர்ந்த டொனால்ட், எடிசன், சார்லஸ் ஆகியோர், பட்டாசு தங்கள்மீது படும்படி வெடிப்பதாகக் கூறி தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட மோதலில், டொனால்ட் அருகிலிருந்த இரும்பு ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்சின் இடது பகுதியிலும், ரஞ்சித்தின் முகத்திலும் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் சமயபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதயப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ்டோபர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகத்தில் காயமடைந்த ரஞ்சித்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Trichy firecracker dispute murder தொடர்பாக போலீசார் கிறிஸ்டோபரின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து, டொனால்ட், எடிசன், சார்லஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.





























