பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனைத் தெரிவித்த அவர் இதே காலப்பகுதியில் பகிடிவதை தொடர்பாக 141 முறைப்பாடுகளும் கடுமையான காயங்கள் தொடர்பாக 93 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக கூறினார்.
பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழக மட்டத்தில் 28 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பகிடிவதை கலாசாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக விசேட செயலணி ஒன்று நியமிக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் உளநலத்தை மேம்படுத்தும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன் மஹபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.




























