உதவித் தொகை வழங்கலில் அதிகரித்துள்ள கண்காணிப்பு
குற்றத்திற்குப் பிறகு மீள்வதற்கான ஆலோசனை, சட்டச் செலவுகள், இடமாற்றச் செலவுகள் மற்றும் வன்முறைக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட முதன்மை நபர்களுக்கான ஒருமுறைத் தொகைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்தத் திட்டம் பணம் வழங்குகிறது.
2024-25 நிதியாண்டில் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 244 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்பட்டன. இது முந்தைய நிதியாண்டின் 100 மில்லியன் டொலர்களைவிடவும், 2022-23 நிதியாண்டில் வழங்கப்பட்ட 40 மில்லியன் டொலர்களைவிடவும் அதிகமாகும். டிசம்பர் 31 நிலவரப்படி, நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 125 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வர வேண்டும் என்று லாரா கெர்பர் கேட்டுக்கொண்டார். நிதியுதவி மோசடி குற்றமாக இருப்பதுடன், உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்டோரிடமிருந்து ஆதரவைப் பறிப்பதாகவும் அவர் தெரிவித்தார். திட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவது அல்லது உள்நாட்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறதா என்பது குறித்து அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.
Victim Assist Queensland fraud review தொடர்பாக, பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறை அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். அனைத்து வழக்குகளிலும் காவல்துறையில் புகார் அளிப்பதை கட்டாயமாக்கக் கூடாது என அவர்கள் கூறினர். பல பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகுவதில் பாதுகாப்பற்றதாக உணரக்கூடும் என்பதால், எந்த மாற்றமும் உதவி பெறுவதற்கான தடையாக மாறக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.


































