இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வால் நிராகரிக்கப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது மரண தண்டனை பெற்றிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றம் ஏழு பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்து மரண தண்டனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு நீண்டகாலமாக நீடித்திருந்த சட்டப் போராட்டத்திற்கு முடிவாக அமைந்துள்ளது.


























