இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான (பெண்) நெகம்போவில் உள்ள கட்டுவெல்லகமத்தைச் இருப்பிடமாக கொண்ட 25 வயது மதிக்கத்தக்க செவ்வந்தி என அழைக்கப்படும் பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரின் விவரங்கள்:
- பெயர்: பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி
- வயது: 25 வயது
- தேசிய அடையாள அட்டை எண்: 995892480V
- முகவரி: நெகம்போ வீதி, ஜெய மாவத்த, கட்டுவெல்லகம
இந்த பெண் தொடர்பான துல்லியமான தகவல்களை சரியான முறையில் அல்லது மறைமுகமாகவோ தங்களுக்கு தெரிய படுத்தவும் அத்துடன் இது தொடர்பான தகவல்களை வழங்கும் போது உரிய நபரின் பாதுகாப்பை உறுதி படுத்தும் முகமாக அவர் தொடர்பான எந்த தகவல்களையும் வெளிவிட மாட்டோம் என தலைமை போலீஸ் அதிகாரி திரு. பிரியந்த வீரசூரிய (IGP) தெரிவித்துள்ளார், அது மட்டுமல்லாது இது சாத்தியமாகும் பட்சத்தில் குறித்த நபருக்கு பணவெகுமதிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்:
கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரி – 071-8591735
கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் – 071-8591727





























