தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப் பயணத்திற்காக ஒரு சில நாடுகளை இலவச விசா அடிப்படையில் தாய்லாந்து அரசு 60 நாட்களுக்கு தங்களது நாட்டு எல்லைக்குள் வருவதற்கு அனுமதி அளித்திருந்தது இந்தச் சலுகை அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்ததாகவே இருந்தது.
தற்போது தாய்லாந்த அரசானது இந்த 60 நாட்கள் இலவச விசா காலக்கெடுவை 30 நாட்களாக குறைக்க முடிவு எடுத்துள்ளது கிட்டத்தட்ட 93 நாட்டவர்களுக்கு இந்த முடிவினை தாய்லாந்து அரசு எடுக்க முனைந்துள்ளதுடன் இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது தாய்லாந்தில் குறித்த சுற்றுலா பயணிகள் தூர நாட்டுப் பயணிகள் மற்றும் சாதாரண சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்குகின்ற காலப்பகுதிகள் கிட்டத்தட்ட இரண்டு தொடக்கம் மூன்று வாரங்களுக்கு உட்பட்டதாக காணப்படுவதாகவும் மேலதிகமாக இந்த 60 நாட்களை தாய்லாந்துக்கு சட்டவிரோதமான முறையில் குடியேறி சட்டவிரோதமான வியாபார செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களால் சட்டத்திற்கு புறம்பான வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசம் போதுமானதாகவும் கண்டறியப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாய்லாந்து அரசு அங்கம் அறிவித்திருக்கின்றது.
குறித்த விசா காலக்கெடு மாற்றுவது தொடர்பான சட்டம் அந்நாட்டு அரசினால் அறிவிக்கப்பட்ட போதிலும் இந்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் எவ்வாறான மாற்றங்களை உள்ளடக்கி இந்த சட்டம் அல்லது இந்த காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.





Leave a Reply