பிரான்சில் ‘Assurance Maladie’ புதிய மருத்துவ விடுப்பு சான்றிதழ் சரிபார்க்கும் முறையில் சிறிய மாற்றம் ஒன்றினை எதிர்வரும் ஜூன் மாதம் 2025க்கு பின்னர் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதாவது சுகாதார காப்பீட்டு துறையில் மருத்துவ விடுப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு புதிய முறமையை இதன் ஊடாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஏற்கனவே இடம்பெற்ற மருத்துவ காப்பீடு தொடர்பான மோசடிகளை முழுமையாக நீக்க இது ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது எனவே எதிர்வரும் ஜூன் மாதம் 2025க்கு பின்னரான காலப்பகுதிகளில் இந்த முறைமை கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

(Secure Cerfa Forms) Cerfa பாதுகாப்பான படிவங்கள் எனப்படும் இந்த புதிய சான்றிதழில் எதிர்வரும் ஜூன் மாதம் 2025க்கு பின்னரான காலப்பகுதியில் உங்களுடைய மருத்துவ குறிப்பு சான்றிதலுடன் இணைத்து கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் இந்த புதிய முறையில் மூலமாக உங்களது தினசரி உதவித்தொகையில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பது மட்டுமல்லாது மருத்துவ சான்றிதழ்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்துவதுடன் மருத்துவர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது பரிசோதனைகளை எளிதாக்க ஒரு சிறந்த வழியாக இந்த பாதுகாப்பு படிவம் காணப்படும்.

குறிப்பாக சுகாதார காப்பீட்டு துறையில் 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கிட்டத்தட்ட 628 மில்லியன் யூரோக்கள் காப்பீட்டுத் துறையினால் மோசடிகளாக கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இவை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீத அதிகரிப்பதாக காணப்படுகிறது அதே போன்று நடப்பு ஆண்டிலும் இந்த மோசடிகளை தடுக்கும் முகமாக இவ்வாறான மேம்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உள்வாங்கி மேலும் மோசடிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இந்த காப்பீட்டு துறை திட்டம் தீட்டி உள்ளது. எனவே அதன் ஒரு அங்கமாக இந்த புதிய நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 2025-க்கு பின்னர் கட்டாயமாக பயன்படுத்தப்பட உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு
Secure Cerfa Forms – Assurance Maladie

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading