பிரிட்டானியாவில் கல்லீரல் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தியாவினை சேர்ந்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் குழந்தை ஒவ்வாமை மற்றும் சில அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக கல்லீரல் தொடர்பான மாதிரி பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள வைத்தியர்கள் முடிவு செய்தனர்.
இந்த பரிசோதனை மேற்கொள்வதாயின் குழந்தையின் நெஞ்சு பகுதி ஊடாக ஊசி ஒன்றை உட்செழுத்தி கல்லீரல் மாதிரியே பெற வேண்டும் உண்மையில் இது தொடர்பான பரிசோதனைகளும் அல்லது சிகிச்சைகளை வழங்கும்போது பல ஆண்டுகால அனுபவம் நிறைந்த வைத்தியர்களால் மேற்கொள்ள வேண்டிய இந்த வேலையை புதிதாக பயிற்சியில் இணைந்த குறித்த வைத்தியர் பயிற்சியின் போது இவ்வாறான ஒரு அபாயகரமான சிகிச்சை முறைமையை முன்வந்து மேற்கொண்டதன் விளைவு இந்த மூன்று வயது குழந்தையின் உயிரை பறித்துள்ளது.
குறித்த பரிசோதனைக்காக நெஞ்சு வழியாக செலுத்தப்பட்ட இந்த ஊசி ரத்தக்குழாய் ஒன்றில் கீறல் ஏற்பட்டதன் காரணமாக இரத்த கசிவு ஏற்பட்டு குறித்த குழந்தை பின்னர் மரணம் அடைந்திருந்தது. இந்த இழப்பின் முழு பொறுப்பும் வைத்தியசாலை நிர்வாகத்தினையே சாரும். இந்த பச்சிளம் குழந்தை இழப்பு பெரும் சோகத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.





Leave a Reply