சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

மியான்மரில் 28/03/2025 காலை வேளையில் இடம் பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 144 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 732 பேர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த இயற்கை அனர்த்தத்தின் அறிகுறி உலகில் பல பாகங்களில் மேலும் பல பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றது. 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் மண்டலே அருகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாய்லாந்தில் ஒரு சில பகுதிகள் மற்றும் சீனாவின் ஒரு சிலர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அனர்த்தத்தின் விளைவாக தாய்லாந்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் இந்த இடுபாடுகளுக்குள் சிக்கி மீட்பு பணிகள் மும்முறமாக இடம்பெற்று வருகின்றது. இந்த அனர்த்தத்தின் மூலம் உயிரிழந்த அல்லது காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடங்கள் பாலங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் மியான்மார் அரசு தற்போது அதிதீவிர ஆறு பகுதிகளில் அவசர நிலை பிரகனப்படுத்தி உள்ளது. இந்த அனர்த்தத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக முன்வந்துள்ளதுடன் உலக நிவாரண அமைப்புகளாக ஐநா மற்றும் உலக சுகாதாரத் திணைக்களம் மியன்மார் உடன் தாங்கள் உறுதுணையாக நிற்பதாக உறுதியளித்து உள்ளனர்.

இதேபோன்று இதற்கு முன்னரும் மியன்மாரில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அதனூடாக பாரிய அளவிலான அழிவுகளையும் சந்தித்துள்ளது. இவ்வாறு கடந்த 2012 நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகவும் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 230 ஆகவும் காணப்பட்டிருந்தது, இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவின் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மியான்மர் தனது புவியியல் அமைப்பின் காரணமாக நிலநடுக்கங்களுக்கான அதிக அபாயத்தை கொண்டுள்ள நாடாக காணப்படுகிறது எனவே பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிலநடுக்க எதிர்ப்பு கட்டமைப்பு மற்றும் அவசரநிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மியன்மார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்