தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் மீதும் வழக்கு
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்தார். இதையடுத்து Anbil Mahesh arrest தொடர்பான காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
































