இதையடுத்து காவல்துறையினர் அவர் வசித்து வந்த ராஜகதலுவ பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டபோது சடலமொன்று மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் துலன் ஹசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் நீண்டகாலமாக உடல்நல மற்றும் மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பகல் நேரங்களில் அவரை சந்தேகநபரே பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக ஆரச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





























