பிரஞ்சு அரசு அறிவிப்பின் படி இன்டர்பாங்க் பணப் பரிமாற்றங்கள் (ஒரு வங்கி கணக்கிலிருந்து வேறு வங்கியில் இருக்கும் கணக்குக்கு செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள்) ஈஸ்டர் வார இறுதியின் போது சில நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும்.
வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றங்கள் – தற்காலிகமாக தடைபடும், இதன் பொருள் நீங்கள் எந்த பணப்பரிமாற்றத்தையும் தொடங்கினாலும் அந்த பணம் உடனடியாக வராது குறிப்பாக மார்ச் 3 மற்றும் 6 ஆகிய நாட்களில் செய்யப்படும் பரிமாற்றங்கள் அப்ரல் 7 அன்று மட்டுமே முடிவடையும்.
பொதுவாக வார இறுதிகள் மற்றும் சில அரசு பணி நாட்களில் European Central Bank போன்ற பண பரிமாற்ற அமைப்புகள் மூடப்படும். இதனால் ஈஸ்டர் வெள்ளி (April 3) மற்றும் ஈஸ்டர் திங்கள் (April 6) ஆகிய நாட்களில் சாதாரண இன்டர்பாங்க் பணப்பரிமாற்றங்கள் செயல்படாது ஆனால் ஒரே வங்கியில் உள்ள கணக்குகளுக்கான பரிமாற்றங்கள் தொடரும் மற்றும் உடனடி (instant) பணப்பரிமாற்றங்கள் 24/7 செயல்படும்.
இந்த அறிவிப்பு வங்கிக் கணக்கு பயனாளர்களுக்கு முன்கூட்டியே திட்டமிட உதவும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


























