ஈஸ்டர் விடுமுறையில் – ஐரோப்பா செல்லும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு புதிய எல்லைச் சோதனை.
ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கு புதிய Entry/Exit System (EES) எனப்படும் டிஜிட்டல் எல்லைச் சோதனை நடைமுறை குறித்து பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஈஸ்டர் விடுமுறையில் புதிய முறை பழைய பாஸ்போர்ட் முத்திரை முறையை மாற்றி பயணிகளின் வருகை மற்றும் வெளியேறும் தகவல்களை மின்னணு முறையில் பதிவு செய்யும். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் (EU) எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்குவோரைக் கண்டறியவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EES முறை 2025 அக்டோபர் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2026 ஏப்ரல் 10 முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த முறையில் ஐரோப்பாவின் Schengen பகுதிக்கு செல்லும் non-EU பயணிகள் முதல் முறை பயணம் செய்யும் போது விரல் ரேகை மற்றும் முகப்படம் போன்ற உயிரியல் தகவல்களை வழங்க வேண்டும்.
இதனால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த புதிய சோதனை முறை 29 ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் குறுகிய கால (90 நாட்கள் வரை) பயணங்களின் வருகை-பிரிவு பதிவுகள் தானாக சேமிக்கப்படும். பயணிகள் தங்கள் போக்குவரத்து நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எல்லைச் சோதனைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.





Leave a Reply