France Heatwave, பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்ப அலை படிப்படியாக குறைந்து வருகிறதாலும் நாட்டின் சில மாவட்டங்களில் இன்னும் அதிக வெப்பநிலை தொடரும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தென் கிழக்கு மற்றும் மத்திய பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 30°C முதல் 35°C வரையிலும், சில இடங்களில் அதற்கும் அதிகமாகவும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதியவர்கள் சிறுவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளை தவிர்க்குமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு புறம் நாட்டின் பல வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளதுடன் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கைகளும் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பல பகுதிகளில் 10°C முதல் 12°C வரை வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோடைகாலத்தில் பிரான்ஸ் ஏற்கனவே பல கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளது. அதிக வெப்பம் மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத்தீ அபாயமும் பல பகுதிகளில் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்













Leave a Reply