செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாளச் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த முறை உண்மையான பயனரையே உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் அல்லது போலியான காட்சிகளைப் பயன்படுத்தி கணக்கை அணுகும் மோசடி முயற்சிகளைத் தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என Google தெரிவித்துள்ளது.Google Selfie
குறிப்பாக கணக்கு மீட்பு (Account Recovery) அல்லது சந்தேகத்திற்கிடமான உள்நுழைவு முயற்சிகள் கண்டறியப்படும் சூழ்நிலைகளில் இந்த புதிய சரிபார்ப்பு முறை பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கடவுச்சொல் திருட்டு, அடையாள மோசடி மற்றும் அனுமதியற்ற கணக்கு அணுகல் போன்ற இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Google ன் இந்த புதிய பாதுகாப்பு அம்சம் படிப்படியாக உலகளாவிய பயனர்களுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு தரநிலைகளுக்கு அமைவாகவே இந்த செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இணைய பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் பாரம்பரிய கடவுச்சொற்களை மட்டுமே நம்பாமல் பல அடுக்கு பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தும் Google ன் சமீபத்திய முயற்சியாக இந்த புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு வசதி பார்க்கப்படுகிறது.





























