மேலும் சடலத்தின் முகப்பகுதி கடுமையாக சிதைக்கப்பட்டிருந்ததுடன் காட்டுயிர்களால் ஓரளவு சேதமடைந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஹோமாகம பிடிப்பன கடனாவத்தை சமகி மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் நேற்று (15) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக மீகொட காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மீட்கப்பட்ட சடலத்துடன் ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Sri Lanka News
காணாமல் போனதாக கூறப்படும் நபர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியதுடன் பகுதி நேரமாக மோட்டார் சைக்கிள் டாக்ஸி சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் ஒருவரை அழைத்துச் செல்ல வீட்டை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































