31 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த Satnam Singh 2024 ஜூன் மாதம் லத்தினா பகுதியில் உள்ள பண்ணையில் பணியாற்றியபோது இயந்திர விபத்தில் ஒரு கையை இழந்தார். குற்றப்பத்திரிகையின்படி விபத்துக்குப் பின்னர் உடனடியாக மருத்துவ உதவி அழைக்காமல் பலத்த காயமடைந்த அவரை அவரது வீட்டின் முன் விட்டு சென்றதாக பண்ணை உரிமையாளர் Antonello Lovato மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் Singh உயிரிழந்தார்.
லத்தினா நீதிமன்றத்தின் Assize Court Antonello Lovato வை சாத்தியமான விளைவுகளை அறிந்தே செயல்பட்ட கொலை குற்றத்தில் குற்றவாளி எனக் கண்டறிந்து 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அரசு தரப்பு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் சில தளர்வு காரணிகளை கருத்தில் கொண்டு 16 ஆண்டு தண்டனையை வழங்கியது.
இந்த வழக்கு இத்தாலியின் விவசாயத் துறையில் இடம்பெறும் Caporalato எனப்படும் சட்டவிரோத தொழிலாளர் சுரண்டல் முறைக்கு எதிரான போராட்டத்தின் அடையாள வழக்காக மாறியுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளதுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலை உரிமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
































