சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கராப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வீட்டை சோதனை செய்தபோது குளியலறைக்குள் அழுகிய நிலையில் சடலத்தை கண்டுபிடித்தனர். Karapitiya Body Found
மீட்கப்பட்ட சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் உள்ளனவா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





























