திரூர் ஆற்றங்கரையில் தாக்கப்பட்ட இருவர்
பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த சஃபானா (19), தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் காதலனைத் தாக்குவதற்காக நண்பர்களிடம் உதவி கேட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் திரூர் வடக்கு அன்னாரா பகுதியில் உள்ள தோழிகளின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
சஃபானாவைத் தேடி காதலனும் அவரது நண்பரும் நள்ளிரவில் திரூருக்கு வந்தனர். அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி நாதியா (20) ரயில் நிலையப் பகுதிக்கு வந்ததாகவும், அவருடன் இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகியோர் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து இருவரையும் முதலில் பைக்கிலும் பின்னர் காரிலும் அழைத்துச் சென்ற கும்பல், காருக்குள் வைத்து அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காதலனின் செல்போனையும் பறித்துக்கொண்டு, அதிகாலை 1.30 மணியளவில் தாழேபாலம் ஆற்றங்கரையோரச் சாலையில் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
தகவலறிந்த திரூர் போலீஸார் நடத்திய விசாரணையில் சஃபானா, நாதியா, ரபீபா (25), இர்ஷாத் மற்றும் அசாருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Kerala boyfriend attack case விசாரணையில், இர்ஷாத் மற்றும் அசாருதீன் மீது முன்பே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.






























