இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வரவிருக்கும் பருவத்திற்காக இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் குமார சங்கக்காரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் அணியின் “Director of Cricket” பொறுப்பையும் தொடர்ந்தும் வகிப்பார்.
2008 ஆம் ஆண்டு IPL சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், இந்த நியமனத்தை திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக ‘X’ தளத்தில் வெளியிட்டது. ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் பிரபல பாடலை பின்னணியாக கொண்டு வெளியிடப்பட்ட குறும்படம் தற்போது வைரலாகி, இந்தியா மற்றும் இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் துறை இயக்குநராக இருந்த சங்கக்காரா, இனி இரட்டை பொறுப்பில் செயல்பட உள்ளார். 2026 பருவத்திற்கான அணியின் மறுவடிவமைப்பை முன்னெடுத்து, அணியின் திறனைக் கட்டியெழுப்புவதில் சங்கக்காராவின் அனுபவமும் தூரநோக்கமும் பெரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply