இலங்கை கிரிக்கெட் அணியின் ஒற்றுமை நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தேசிய அணியின் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் செவ்வாயன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னரும், பாதுகாப்பு அச்சங்கள் மத்தியில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை தொடர்ந்ததற்காக இலங்கை அணிக்கும், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் (SLC) பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பு நன்றி தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட காணொளி செய்தியில், பல பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை அணிக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, மீதமுள்ள போட்டிகளுக்காக ராவல்பிண்டி மைதானத்தை ரசிகர்கள் நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





Leave a Reply