சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவின் வீட்டருகே திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் திங்கட்கிழமை (11) தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லோயர் டிர் (Lower Dir) பகுதியில் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத சிலர் நசீம் ஷாவின் ‘ஹுஜ்ரா’ (வீட்டருகே உள்ள சொத்து) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் வீட்டின் பிரதான கதவு, ஜன்னல்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வாகனம் சேதமடைந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

தாக்குதலை அடுத்து ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நசீம் ஷா தற்போது ரவல்பிண்டியில் இருப்பதால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் தேசிய அணி இலங்கைக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டித் தொடர் (நவம்பர் 11 முதல் 15 வரை) ஆடத் தயாராகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து நசீம் ஷா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் மூன்று அணிகள் கொண்ட T20I தொடர் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்த தொடர் ரவல்பிண்டி மற்றும் லாகூர் நகரங்களில் நவம்பர் 17 முதல் 29 வரை நடைபெறும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading