Metropolitan Police தெரிவித்ததன்படி 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நால்வரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக முக்கிய காய சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக 47 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதல் மற்றும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் கத்தரிக்கோல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில் இது மனநலப் பிரச்சினையுடன் தொடர்புடைய தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை.
தாக்குதல் நடைபெற்ற Endell Street பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
































