நாகையில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 137 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க நிர்வாகியும் வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் நாகை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்கள்
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்ட பின்னர், தொலைபேசி உரையாடல்கள், காரின் பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பூபாலனின் மனைவி பிரேமியாவிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. கடத்தல் பணம் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டதா, இலங்கையில் சொத்துகள் வாங்கப்பட்டதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க மேலிடத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை பூபாலன் சந்தித்ததாக விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபருக்கு கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. Nagapattinam meth smuggling case தொடர்பாக தீபாவளிக்குப் பிறகு மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.


































