சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும் காவலில் இருந்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் மரணங்கள் குறித்தும் சம அளவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் இதுவரை 33 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 23 மரணங்கள் கொடூரமான சூழ்நிலைகளில் இடம்பெற்றதாகத் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் பலர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படாத சந்தேகநபர்கள் என்றும் அவர் தெரிவித்தார். கைதிகளின் மரணங்களுக்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை இக்கருத்துகள் ஆனந்த பாலித வெளியிட்ட குற்றச்சாட்டுகளாகும் அவை தொடர்பாக அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.



























