யூதர் பகுதியில் மூன்று மாதத் தடை
‘Free Palestine’ என்ற வாசகத்தைக் கொண்ட மோட்டார் ஹோமை யூதர் பகுதியில் மீண்டும் மீண்டும் ஓட்டியது அரசியல் ஆர்ப்பாட்டமாகக் கருதப்படுவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு, ஆண்ட்வெர்ப் காவல்துறை அவரையும் அவரது மூன்று உறவினர்களையும் நிர்வாகக் காவலில் எடுத்தது. அவர்கள் ஒரு இரவு காவல் அறையில் வைக்கப்பட்டனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பயணம் தூண்டுதல் மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு என காவல்துறை தெரிவித்தது.
ஆனால், வழிகாட்டி செயலியின் அறிவுறுத்தலைப் பின்பற்றியதாகவும், அது யூதர் பகுதி என்பதை அறியவில்லை என்றும் அல்-மானி கூறியுள்ளார். அவர் நகர மையத்திலிருந்து வில்ரெய்க் நோக்கிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
Omar Almaani motorhome மீண்டும் அந்த வாசகங்களுடன் நகருக்குள் வந்தால், ஆர்ப்பாட்ட அனுமதி பெற வேண்டும். மேலும், அந்த வாகனம் மூன்று மாதங்களுக்கு யூதர் பகுதிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்-மானி தொடர்பு விபரங்களை வழங்க மறுத்ததாக நகரம் கூறியதால், நோர்வே தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
































