நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறையாக மாறும் என்றும் உலகளாவிய அளவில் இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்புக்கூறலுடனான சர்வதேச கட்டண தளங்கள் அவசியம் என்றும் வலியுறுத்தினார். அதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் Eranga Weeraratne கருத்து தெரிவிக்கையில் முறையான சர்வதேச கட்டண முறைமைகள் இல்லாததால் பல ஆண்டுகளாக மக்கள் முறைசாரா சந்தைகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தற்போது இலங்கையின் டிஜிட்டல் ஏற்றுமதி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை 20 சதவீதமாக உயர்த்துவதே அரசின் பிரதான இலக்காகும் எனவும் தெரிவித்தார். இந்த PayPal சேவை விரிவாக்கம் மூலம் இலங்கை சுயாதீனப் பணியாளர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் ஆன்லைன் வர்த்தகத் துறையினர் உலகளாவிய சந்தைகளுடன் எளிதாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




























